அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ‘Our Journey Together’ என்ற காபி டேபிள் புத்தகத்தை சிறப்புப் பரிசாக அளித்துள்ளார்.
அதில், ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்றும் டிரம்ப் எழுதி கையெழுத்திட்டுள்ளார். 320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதே போல பிரதமர் மோடியை, தனது குழந்தைகளுடன் சந்தித்த எலான் மஸ்க், ஸ்டார்ஷிப்பில் பயன்படுத்தப்படும் heat shield ஒன்றை பரிசளித்துள்ளார்.