குஜராத்தில் கோச்சிங் சென்டரில் தனது மகளுடன் பேசிய மாணவனை கத்தியால் சரமாரியாக குத்திய தந்தையின் வீடியோ வெளியாகியுள்ளது.
குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் கார்த்தி என்ற மாணவர், மற்றொரு மாணவியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த அந்த மாணவியின் தந்தையான ராச்சாத் என்பவர், கடந்த 11-ம் தேதி கோச்சிங் சென்டருக்கு சென்றுள்ளார். பின்னர் இதுதொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென கத்தியை எடுத்து கார்த்திக்கை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த மாணவர் கார்த்திக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கத்தியால் குத்திய மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.