மயிலாடுதுறையில் பிரபல ஷாப்பிங் மாலில் வாங்கிய காலவதியான சாக்லேட்டில் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மனக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன், தனது மகளின் பிறந்த நாளுக்காக பட்டமங்கல தெருவில் உள்ள பிரபல தனியார் ஷாப்பிங் மாலில் சாக்லேட் பாக்ஸ் வாங்கியுள்ளார். அந்த சாக்லேட்டை மகளின் சக தோழிகளுக்கு வழங்கியபோது அதில் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காலவதியான சாக்லெட்டில் பூச்சி இருந்தது குறித்து, விளக்கம் கேட்டபோது ஊழியர்கள் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே கடையில் கடந்த மாதம் 5ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சாக்லேட்டில் பூச்சிகள் நெளிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஷாப்பிங் மால் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.