திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 2, 2025, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பாதுக்காப்பை பல படுத்த இராணுவ கட்டமைப்பு உறுதி படுத்தி வருகிறார்  பிரதமர் மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டு வெடிப்பில் உயிரிழந்த  58 பேர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தபட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு  மரியாதை செலுத்தினர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,  பிப்ரவரி 14, 1998 ஆண்டு நடந்த சம்பவம் நமது மனதில் கரும் புள்ளியாக உள்ளது என தெரிவித்தார்.  திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதத்தை ஒடுக்க  திமுக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை,  நடவடிக்கைகள் எடுக்கும் போது ஒரு சமுதாயத்திற்கு எதிராக மாறிவிடுவோமா ? வாக்குகள் கிடைக்காதோ என்ற எண்ண்த்தில்  திமுக அரசு செயல்படுகிறது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுக்காப்பு இல்லை… திமுக ஆட்சியின் இதுதான் நிலைமை, அரசு பேருந்து, ஆட்டோ, ஆம்புலன்ஸ் பல்கலைக்கழகம், கல்லூரி,அரசு பள்ளி, தனியார் பள்ளி பல இடங்களில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவின் கடைசி காலம் வந்து விட்டது,  கடவுளே வந்தாலும் தமிழ்நாட்டை மாற்ற முடியாது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்ற வருவதாகவும்  அண்ணாமலை தெரிவித்தார்.

இந்தியாவில் பாஜக ஆட்சியை பொருத்தவரை எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை முழுமையாக செய்து முடிக்கும். திமுக ஆட்சி முடிய இன்னும் 1ஆண்டு தான் உள்ளது. 2026 ஆண்டு தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என்றும்  அண்ணாமலை தெரிவித்தார்.

இந்தியாவில் பாதுக்காப்பை பலப்படுத்த இராணுவ கட்டமைப்பு பிரதமர் மோடி உறுதிப்படுத்தி  வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.

மக்கள் கொடுக்கும் வரி பணத்தை வைத்து மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்த பல திட்டங்களை மோடி  செய்து வருகிறார். பாஜகவில் இருக்கும் யாரும் சுயநல வாதிகள் இல்லை.. மக்களின் பாதுக்காப்பை மட்டும் சிந்திப்பார்கள். 2026 ஆண்டும் மண்ணோடு, வேறோடு புடிங்கி எரியபடும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி வரும்போது தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் வேட்டை ஆடபடுவார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாட்டில் காவல் துறையினர் பல நேரங்களில் தர்ம சங்கடமான வேலைகளை, கட்டாயத்தின் பேரில் செய்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  தெரிவித்தார்.

அனைவரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடிய ஒரே கலாச்சாரம் இந்துத்துவம் என்றும் சனாதனத்தை பற்றி சாதாரண மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று ம் அண்ணாமலை கூறினார்.

Tags: bjp k annamalaikovaitn bjpPeople are not safe in DMK rule: Annamalai allegation!
ShareTweetSendShare
Previous Post

பிரபல ஷாப்பிங் மாலில் வாங்கிய சாக்லேட்டில் பூச்சி!

Next Post

விஞ்ஞானிகள் குழப்பம் : ஆச்சரியங்கள் நிறைந்த கேதார்நாத் கோயில்!

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies