இந்தியாவில் பாதுக்காப்பை பல படுத்த இராணுவ கட்டமைப்பு உறுதி படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை குண்டு வெடிப்பின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தபட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பிப்ரவரி 14, 1998 ஆண்டு நடந்த சம்பவம் நமது மனதில் கரும் புள்ளியாக உள்ளது என தெரிவித்தார். திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
தீவிரவாதத்தை ஒடுக்க திமுக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை, நடவடிக்கைகள் எடுக்கும் போது ஒரு சமுதாயத்திற்கு எதிராக மாறிவிடுவோமா ? வாக்குகள் கிடைக்காதோ என்ற எண்ண்த்தில் திமுக அரசு செயல்படுகிறது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுக்காப்பு இல்லை… திமுக ஆட்சியின் இதுதான் நிலைமை, அரசு பேருந்து, ஆட்டோ, ஆம்புலன்ஸ் பல்கலைக்கழகம், கல்லூரி,அரசு பள்ளி, தனியார் பள்ளி பல இடங்களில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவின் கடைசி காலம் வந்து விட்டது, கடவுளே வந்தாலும் தமிழ்நாட்டை மாற்ற முடியாது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்ற வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தியாவில் பாஜக ஆட்சியை பொருத்தவரை எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை முழுமையாக செய்து முடிக்கும். திமுக ஆட்சி முடிய இன்னும் 1ஆண்டு தான் உள்ளது. 2026 ஆண்டு தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தியாவில் பாதுக்காப்பை பலப்படுத்த இராணுவ கட்டமைப்பு பிரதமர் மோடி உறுதிப்படுத்தி வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.
மக்கள் கொடுக்கும் வரி பணத்தை வைத்து மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்த பல திட்டங்களை மோடி செய்து வருகிறார். பாஜகவில் இருக்கும் யாரும் சுயநல வாதிகள் இல்லை.. மக்களின் பாதுக்காப்பை மட்டும் சிந்திப்பார்கள். 2026 ஆண்டும் மண்ணோடு, வேறோடு புடிங்கி எரியபடும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி வரும்போது தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் வேட்டை ஆடபடுவார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டில் காவல் துறையினர் பல நேரங்களில் தர்ம சங்கடமான வேலைகளை, கட்டாயத்தின் பேரில் செய்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தார்.
அனைவரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடிய ஒரே கலாச்சாரம் இந்துத்துவம் என்றும் சனாதனத்தை பற்றி சாதாரண மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று ம் அண்ணாமலை கூறினார்.