அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை அனுப்பி வைக்கும் 2-வது விமானம் இன்று இந்தியா வர உள்ளது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக இந்தியர்கள் பெருமளவில் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். அதன்படி அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி முதற்கட்டமாக 104 பேருடன் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரசுக்கு விமானம் வந்தடைந்தது.
இதனைதொடர்ந்து இரண்டாவது கட்டமாக இந்தியர்களை அழைத்து வரும் விமானம் இன்று அமிர்தசரஸ் வருகிறது. இ தேபோல் நாளை மற்றொரு விமானம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.