திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வந்த அரைமணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆங்கிலேயர்களே இது முருகனின் மலைதீர்ப்பு வழங்கி விட்டார்கள் என தெரிவித்தார்.
முருகனின் தளத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி மாமிசம் சாப்பிடுவதாகவும், கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவருக்கு மவுன அஞ்சலி செலுத்துவது தான் திராவிட மாடலா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 2026-ல் திமுக ஆட்சி வேரோடு அகற்றப்படும் என்றும் அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். விஜய்க்கு திமுக அரசு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை மக்களாக பார்க்கும் ஒரே கட்சி பாஜக என்றும், பாஜகவை சார்ந்தவரா என் பார்த்து பாதுகாப்பு கொடுக்கும் வழக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.