திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது தவறான குற்றச்சாட்டை முன் வைத்து போராட்டம் என்ற பெயரில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டு சிலர் செயல்படுவதாகவும் இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும் பவன் கல்யாணிடம் மனு அளித்தனர்.