மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய செயலருக்கு நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், நாய்களுக்கான தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்வதற்காக உதவ வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து அரசு தரப்பில், வார இறுதியில் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தீர்வு காணப்படுவதோடு, மையங்களையும், கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்த விவாகரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய செயலருக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.