சினிமாவிற்கு கால் ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் நடைபெற்ற புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தவெக தலைவர் விஜய் லெட்டர் பேட் வைத்து கட்சி நடத்தி வருவதாக சாடினார்.
சினிமா படங்களால் ஏமாற்றி அரசியல் செய்து விடலாம் என அவர் நினைப்பதாகவும் கூறினார்.