ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா உரத்தை வேளாண்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சி. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள குடோனில், மானிய விலை யூரியாவை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்திய வேளாண் துறை மற்றும் சிவில் சப்ளை துறை அதிகாரிகள் யூரியாவை கைப்பற்றி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா மூட்டைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்ததும், அவற்றை 8 மாதங்களாக கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக, 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.