அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு, 100 நாள் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 100 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.