செங்கல்பட்டு பெருங்களத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தர மறுப்பு தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெடுங்குளம் ஊராட்சி சந்தனபுரத்தில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள செல்வ விநாயகர் கோயில் இடிக்கப்பட்டது. பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்தில் கோயில் கட்டித்தரப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட இடத்தில் கோயில் கட்டாமல் அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுற்றுவட்டார மக்கள், இடத்தை பார்வையிட வந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.