ராமநாதபுரத்தில் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்துள்ள நிலையில், அவை பூத்துக்குலுங்கும் காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், பெருநாழி, திம்மநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி, உளுந்து, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இருப்பினும் மனம் தளராத விவசாயிகள், இரண்டாவது முறையாக சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்தனர். இந்நிலையில், பயிர்கள் நன்கு முளைத்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.