கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் 3 லாரிகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
அதே வேளையில் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு லாரி பிரேக் பழுதடைந்ததால் மின்மாற்றி மீது மோதி நின்றது. இதில், லாரி ஓட்டுநர் காயமடைந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.