சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பள்ளி மாணவிகளுக்கு, மாணவர்கள் தொந்தரவு கொடுத்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீரகனூரில் பெண்கள் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அடுத்தடுத்து உள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் பாதையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நின்றுகொண்டு மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், இரு பள்ளிகளுக்கும் இடையில் உள்ள மதில் சுவரில் ஏறி மாணவிகளை நோட்டம் விடுவதை மாணவர்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியின் மதில் சுவரில் நின்றகொண்டிருந்த மாணவர்கள், செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து ஓட்டம் பிடித்தனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.