தெலங்கானாவில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கம்மம் மாவட்டத்தில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி முடிகொண்டா அருகே சாலையில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் லாரியில் பயணித்த எட்டு தொழிலாளிகள் கீழே விழுந்த நிலையில் அவர்கள் மீது கிரானைட் கற்கள் விழுந்து எட்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து காயமடைந்த ஆறு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டனர்.