தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஊசிமலை பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதனால் மலைவேம்பு, தோதகத்தி, தேக்கு உள்ளிட்ட ஏராளமான மூலிகை மரங்கள் எரிந்து நாசமானதோடு, கரடி, நரி, புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காட்டுத்தீ ஏற்படுவதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.