திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மாணவர்கள் சாலையை கடந்து செல்ல மேம்பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
முத்தனபள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. ஏராளமான வாகனங்கள் வரும் போது தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
இதனால் சாலையை கடந்து செல்வதற்கு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.