புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள சிறுமாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமயம் அடுத்த குளத்துப்பட்டியில் உள்ள சிறுமாய் கண்மாயில் ஊத்தாகுத்து எனப்படும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கெளுத்தி, கெண்டை போன்ற மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.