திருப்பத்தூர் மாவட்டம் மல்லப்பள்ளி ஊராட்சியில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டை சீரமைக்க ஊராட்சி மன்ற தலைவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.
அன்னாசாகரம் காலனி பகுதியில் வசிப்பவர் லதா. இவருக்கு கடந்த ஆட்சி காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது. இந்த வீடு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை சீரமைத்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் லதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது, அவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.