தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவர்
அநாகரிகமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கீழ ஈரால் கிராமத்தை சேர்ந்த மீனா, கடந்த 9 ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திடீரென உடலநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மீனா சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் ஷான் மாதுரி, மீனாவுக்கு சிகிச்சை அளிக்காமல் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பாஜகவினர், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பெண் மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.