செகந்திரபாத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த 600 கிலோ அழுகிய கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கில் அழுகிய நிலையில் அதிகளவு கோழி இறைச்சிகள் விற்பனைக்கு வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், அங்கு பல வாரங்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அழுகிய நிலையில் உள்ள சுமார் 600 கிலோ கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இந்த கோழி இறைச்சிகள் சமைக்கப்பட்டு அருகிலுள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.