மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதங்களில், இந்த கோயிலுக்கு வருகை தரும் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் உணவகம் நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆடு மற்றும் சேவல்களை நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜையில் கலந்து கொள்வர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சேவல்கள் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்டு பின்னர் அதனைக்கொண்டு பிரியாணி சமைத்து அங்கிருந்த மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.