மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் ஆயிரத்து 562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் ஆயிரத்து 562 ஏக்கர் நில ஆவணங்களையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் நில ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.