​வேற்றுமையில் ஒற்றுமை காசி தமிழ் சங்கமம் 3.0 : எல். முருகன்
Sep 12, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

​வேற்றுமையில் ஒற்றுமை காசி தமிழ் சங்கமம் 3.0 : எல். முருகன்

Murugesan M by Murugesan M
Feb 15, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா​வின் வேற்றுமை​யில் ஒற்றுமை என்ப​தற்கு மேலும் ஒரு சான்று காசி தமிழ் சங்கமம் 3.0 என்று  மத்திய அமைச்சர்  எல். முருகன் தெரிவித்துள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை “காசி தமிழ் சங்கமம் 3.0 குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் எழுதியுள்ள  கட்டுரையில்,

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்​கு​கிறது. இந்தியா​வின் வேற்றுமை​யில் ஒற்றுமை என்ப​தற்கு மேலும் ஒரு சான்று. இன்று முதல் பிப். 24 வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார விழா, நாட்​டின் மிகத் தொன்​மையான ஆன்மிக வளம் கொண்ட காசி​யை​யும், தமிழகத்​தை​யும் ஒன்றிணைக்​கிறது. நிலப்பரப்​பைக் கடந்து ஆழ்ந்த நாகரீகப் பிணைப்பை வளர்க்​கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி​யால் தொடங்கி வைக்​கப்​பட்ட காசி தமிழ்சங்கமம் இந்த ஆண்டு 3-வதுகலாச்சார நிகழ்வாக நடைபெறுகிறது. சுதந்​திரத்​தின் அமிர்தப் பெரு​விழா​வின் ஒரு பகுதியாக மத்திய அரசால் தொடங்​கப்​பட்ட இது, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்​வைக் கொண்​டுள்​ளது. காசி தமிழ் சங்கமம் 3.0 தமிழகத்​தின் உயிரோட்​டமான வளமான பாரம்​பரி​யம், வாராணசி​யின் காலத்​தால் அழியாத மரபுகள் ஆகிய​வற்றை வலுப்​படுத்து​கிறது.

இந்தியா​வின் மிகவும் மதிக்​கத்​தக்க முனிவரான மகரிஷி அகத்​தியரை இந்த 3-வது ஆண்டு நிகழ்வு நினை​வு​கூரு​கிறது. அயோத்​தி​யில், ராமபிரானின் பிராணப்​பிர​திஷ்டை செய்த பின், நடைபெறும் முதலாவது சங்கமம் என்பதும் மகா கும்​பமேளா​வுடன் இணைந்தது என்ப​தா​லும் தனி முக்​கி​யத்துவம் பெறுகிறது.

இந்த சங்கமத்​துக்கு தமிழகத்​தில் இருந்து ஆயிரம் பிரதி​நி​திகளை அழைத்துவர அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. பல்வேறு மத்தியப் பல்கலைக்​கழகங்​களைச் சேர்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவர்​களும் இதில் இணைகின்​றனர். இளைஞர்கள் பங்கேற்​ப​தற்கு சிறப்​புக் கவனம் செலுத்​தப்​படும். இதில் பங்கேற்​போர் நடன நிகழ்வு​கள், இசை, காசி​யை​யும் தமிழகத்​தை​யும் சேர்ந்த அழகிய கலைக் கண்காட்சி ஆகிய​வற்​றை கண்டு​களிப்​பார்​கள்.

மகாகவி பாரதி​யாரின் இல்லம் அமைந்​துள்ள காசி​யின் அனுமன் படித்​துறை புனித யாத்​திரை தலமாக உள்ளது. 200 ஆண்டு​களுக்​கும் மேலாக காசி விஸ்​வநாதர் ஆலயத்​தில் ஸ்ரீ காசி நாட்டுக்​கோட்டை நகரத்​தார் சத்திரம் பலவகையான வசதிகளை செய்து தருகிறது. தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீது பிரதமர் நரேந்திர மோடி, ஒப்புமை இல்லாத அர்ப்​பணிப்பை கொண்​டுள்​ளார். சிங்​கப்​பூரில் திரு​வள்​ளுவர், கலாச்சார மையத்தை அமைத்​தது, ஜகார்த்தா முருகன் கோவில் மகா கும்​பாபிஷேகத்​தில் அவரது ஈடுபாடு இதனை மேலும் உறுதி செய்​கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமை​யின் கீழ் நமது தேசத்​தின் வரலாற்றில் அனைத்து மொழி, அனைத்து பாரம்​பரியம், அனைத்து சமூகம் ஆகிய​வற்றுக்கு உரிய அங்கீ​காரம் அளிப்பதை உறுதி செய்து அனைவரை​யும் உள்ளடக்கிய கலாச்​சாரப் பாதை​யில், இந்தியா தொடர்ந்து நடைபோடு​கிறது.

காசி தமிழ் சங்கமம் 2025-ஐ நாம் கொண்​டாடும் நிலை​யில், நமது பன்முகத்​தன்மை, போற்று​தலுக்கு உரிய பொக்​கிஷமாக உள்ளது என்​பதை நாம் நினை​வில் ​கொள்ள வேண்​டும். ​காசி – தமிழகம் இடையேயான ஒற்றுமை பாரதத்​தின் ஒற்றுமை​யாகும். இதனை இன்று மட்டுமல்​ல, எப்​போதும்​ ​கொண்​டாடுவோம்​ என தெரிவித்துள்ளார்.

Tags: L MuruganThe unity between Kashi and Tamil Nadu is the unity of India: L. Murugan
Share
Tweet
SendShare
Previous Post

ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைப்பு!

Next Post

தேனி : அரசு கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த மாணவர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies