தேனி அருகே அரசு கல்லூரியின் விடுதி கழிவறையில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி அடுத்த மேலசொக்கநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவர் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில் தங்களது மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவரின் குடும்பத்தினரோடு இணைந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.