இலங்கை கடற்படையை கண்டுத்து காரைக்காலில் 500-க்கும் விசைப்படுகளில் மீனவர்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர்களை மீட்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.