உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியின் தேதிகள் நீட்டிக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடி இறைவனை வழிபட்டுள்ளனர். மகாகும்பமேளா நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையிலும், கூட்டம் சற்றும் குறைந்தபாடில்லை.
இதனால் மகாகும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும் தேதிகளை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் மந்தாத், மகா கும்பமேளாவின் அட்டவணையில் அதிகாரப்பூர்வ மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.