அமெரிக்காவில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பிரிவு தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார். அவரின் பரிந்துரையின்படியே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து ஓராண்டுகூட நிறைவுபெறாத காலத்தில் இருப்பவர்களாவர். மேலும், பணிப்பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த ஊழியர்கள் ஆவர். முன்னதாக தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம்வரை வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.