ஒரு கருத்துக்கணிப்பிற்காக மதுரை தினகரன் அலுவலகத்தையே எரித்தவர்கள் தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என தமிழப பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் உள்ள அவல நிலையை கருத்தில் கொண்டு முதல்வரின் போஸ்டரில் எதிர்வினை ஆற்றிய பாட்டியை படம் பிடித்துப் போட்டவரை கைது செய்ததுயார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பாட்டி யாரி என்று அவரையும் தேடியதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு கூட மதிப்பளிக்காதவர்கள கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார்.