அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த விமானம் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
இதில் 65 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கோவா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சல் மாநிலத்தை சேர்ந்த தலா ஒருவர் தாயகம் வந்துள்ளனர்.