கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் 7 சென்டி மீட்டர் நீளம்கொண்ட சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டது.
பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு இரும்புப் பொருட்கள், இராஜராஜ சோழன் காலத்துச் செப்பு காசுகள், அஞ்சனக் கோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது தோண்டப்பட்ட குழியில் 7 சென்டி மீட்டர் நீளம்கொண்ட சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் சங்க காலத்தில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றிருப்பதை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.