திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், முருகப்பெருமானின் 5ஆம் படையான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார்.
அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் பூமாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து மலைக் கோயிலிலின் கொடி மரம் மற்றும் விநாயகர் சன்னதியை வணங்கிய பவன் கல்யாண், மூலவர் முருகப்பெருமானை 15 நிமிடங்களுக்கு மேலாக அமர்ந்து தரிசனம் செய்தார். இதனை அடுத்து கோயில் நிர்வாகத்தினர் முருகப்பெருமான் படம், மலர் மாலை மற்றும் பிரசாதம் வழங்கினர்.