சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், இருமுடியுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டு படிகளில் ஏறி, கோயிலை சுற்றியுள்ள மேம்பாலம் வழியாக சென்று மூலவர் ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில், 18 ஆம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய மாற்றம் மூலம், பக்தர்கள் 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கோயில் சுற்றியுள்ள மேம்பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.