சேலத்தில் மதுபோதையில் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தக் கூறி சேலம் வடக்கு சரக போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடாசலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.
அப்பொழுது நீண்டநேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். மதுபோதையில் இருந்த இளைஞர்கள், ஆய்வாளரிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தகவலறிந்து பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார், போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.