சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால் திருமலை நடைபாதையில் இரவு ஒன்பதரை மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அலிபிரி நடைபாதையின் 7வது மைல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தினமும் இரவு ஒன்பதரை மணிக்கு நடைபாதை மூடப்படும் என்றும், மதியம் 2 மணிக்கு மேல் பக்தர்கள் 70 முதல் 100 பேர் கொண்ட குழுக்களாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதியம் இரண்டு மணிக்கு மேல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டு மலையேறக் கூடாது எனவும் தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.