சென்னை அரும்பாக்கத்தில் உள்ள விநாயகர் கோயிலை எந்த முன்னறிவிப்பும் இன்றி மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜிஏ நகரில் 50 வருடம் பழமையான ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் நிலம் தனக்கு சொந்தமானது என அப்பகுதியில் வசிக்கும் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோயிலில் யாரும் வழிபட கூடாது என நீதிமன்றம் சார்பில் அறிவிப்பு பலகை வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அப்பகுதி மக்கள் கோயிலில் வழிபாடு நடத்தியதால் அதிகாரிகள் கோயிலுக்கு செல்ல முடியாத வகையில் முன்பகுதியை அடைத்துள்ளனர்.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோயிலை திறக்க கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.