நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பூட்டி இருந்த டீ கடையில் திடீரென மர்ம பொருள் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே கவின்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திடீரென பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது.
இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி வெளியே விழுந்தன. டீ கடையில் மின் கசிவோ, சிலிண்டர் எரிவாயு கசிவோ ஏற்படவில்லை என காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.