நத்தம் அருகே தவசிமடை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் உள்ள ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 725 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு அண்டா, கட்டில், டிவி, ஃபேன், டைனிங் டேபிள், ஹாட் பாக்ஸ் போன்றவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக துணை காவல் கண்காணிப்பாளர் சிபின் சாய் சௌந்தர்யன் தலைமையின் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.