வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை, ஆலமரமாக மாற, வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பார்வையிட்டார். இதில் ஜவுளி தயாரிப்புக்கான மூலக்கூறுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அப்போது அதில் பங்கேற்ற 120 நாடுகளின் முக்கிய ஜவுளி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில், வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்தார்.
விக்சித் பாரத் எனும் வளர்ந்த இந்தியா நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை ஆலமரமாக மாற வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார் மேலும், பாரத் டெக்ஸ் உலகளாவிய மெகா ஜவுளி நிகழ்வாக மாறி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.