அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர்.
கென்டக்கி மாகாணத்தில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கென்டக்கி மாகாணத்தில் உள்ள 300 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு வீசிய புயலில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.