நெல்லை அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி இந்து முன்னணி அமைப்பினர் விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு முறையான சிகிச்சை வழங்காத காரணத்தினால் வயிற்றில் இருந்த சிசு உயிரிழப்பு, ஊசி போட்டதால் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் இத்தகைய சம்பவங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டும் காணாமலும் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கக்கூடிய விநாயகர் சிலை முன்பு விளக்கேற்றி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி வழிபாடு நடத்தினர்.