தெலங்கானா மாநிலத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
தெலங்கானா மாநிலம் மேட்சல் புறநகர் பகுதியில் உமேஷ் என்ற இளைஞர் மர்ம நபர்களால் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்த இருவரும் சாதாரணமாக சாலையை கடந்து தப்பிச் சென்ற நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் அரங்கேறிய இந்த படுகொலை சம்பவம் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.