திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
பல்லடம் அருகே அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டோக்கன் வாங்கிய மாடுகளை வாடிவாசலில் அவிழ்க்கும் முன்னரே ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைவதாக விழாக்குழுவினர் தெரிவித்தால் காளைகளின் உரிமையாளர்கள் கோபமடைந்தனர். தங்களது காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
இதனால் காளைகளின் உரிமையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.