ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
சுண்டப்பள்ளி டோங்கா கிராமத்தைச் சேர்ந்த 15 பெண்கள் ஷேர் ஆட்டோவில் விவசாயக் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். நரக்கோடூர் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 5 பெண்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.