புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பெட்டிக்கடையை சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுக்கிரன்விடுதி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில், 78 வயதான அவரது சித்தப்பா கலியபெருமாள் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த இளைஞர் ஒருவர், பெட்டி கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க வந்துள்ளார்.
சாதா வட்டார் கேட்ட நிலையில், முதியவர் கலியபெருமாள் காதில் விழாததால், மீண்டும் கூலிங்கா, சாதா வாட்டாரா என கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் முதியவரை திட்டியுள்ளார். மேலும், காரில் வந்த மேலும் 2 பேர் கடையை சூறையாடியதுடன், கடை உரிமையாளரையும் தாக்கினர். இந்நிலையில், பெட்டிக்கடையை சூறையாடி தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.