ஆந்திராவில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.
குண்டூரில் 60 வயது பெண் ஒருவர் அரசு பொது மருத்துவமனையில் ஜிபிஎஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதன் மூலம் மாநிலத்தில் முதல் GBS மரணம் நிகழ்ந்துள்ளது.
இதேபோல், குண்டூர் மருத்துவமனையில் மேலும் 4 நோயாளிகள் ஜிபிஎஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவின் பிற மருத்துவமனைகளில் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.