சமூக வலைதளங்களில் ஏராளமாக குப்பைகள் இருக்கும், அதனை எல்லாம் மாணவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடாது என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நட்சத்திர கலை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மமிதா பைஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, அஜித்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை அமையாமல் போய்விட்டது, ஆனால் கூடிய விரைவில் அந்த வாய்ப்பு அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இளைய சமுதாயத்தினர் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை பகுப்பாய்வு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கால நேரத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.