2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் மே 20-ம் தேதி முதல் தொடங்குகின்றன.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 25-ம் தேதி நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரின் போட்டிகள் மொத்தம் 13 நகரங்களில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 23-ம் தேதி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.